ADDED : பிப் 29, 2024 05:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியில் வழக்கத்திற்கு மாறான கால நிலை நிலவி வருகிறது. வழக்கமாக மாசி மாதம் பனி காலம். ஆனால் அதிகாலை நேரத்தில் மட்டுமே பனி பொழிவும், பகல் நேரத்தில் கடும் வெயில் நிலவி வருகிறது. அதுவும் காலை 8:00 மணிக்கே வெயில் அதிகரித்து விடுகிறது. பகல் நேரத்தில் சித்திரை மாத அக்னி நட்சத்திர வெயில்போல் சுட்டெரிக்கிறது.கோடை காலம் துவங்குவதிற்கு முன்பே வெயில் சுட்டெரிக்க துவங்கி விட்டதால் பகல் நேரத்தில் சுற்றுலா தளங்கள் வெறிச்சோடி கிடக்கிறது.
புதுச்சேரி கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் நேற்று மதியம் 12:00க்கு சுற்றுலா பயணிகள் வருகை இன்றி வெறிச்சோடி கிடந்தது. ஆனால், மாலை நேரத்தில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்தனர்.

