ADDED : டிச 04, 2025 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: தொடர் மழை காரணமாக நோணாங்குப்பம் படகு குழாம் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
'டிட்வா' புயல் காரணமாக புதுச்சேரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நோணாங்குப்பம் படகு குழாமிற்கு படகு சவாரி செய்ய உள்ளூர் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் வராததால் படகு குழாம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. அதே போன்று, தனியார் படகு குழாம், சுற்றுலா இடங்களில், மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

