/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடன் வரம்பை அதிகரிக்க ஆசை: ரூ. 2.26 லட்சம் இழந்த நபர்
/
கடன் வரம்பை அதிகரிக்க ஆசை: ரூ. 2.26 லட்சம் இழந்த நபர்
கடன் வரம்பை அதிகரிக்க ஆசை: ரூ. 2.26 லட்சம் இழந்த நபர்
கடன் வரம்பை அதிகரிக்க ஆசை: ரூ. 2.26 லட்சம் இழந்த நபர்
ADDED : ஆக 23, 2025 05:00 AM
புதுச்சேரி: கிருமாம்பாக்கத்தை சேர்ந்த நபரை தொடர்பு கொண்ட மர்ம நபர், தங்களது கிரெடிட் கார்டு கடன் வரம்பை அதிகரிக்க, அதற்கான லிங்க் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதில் தங்களது விவரங்களை பதிவிட்டால், உடனடியாக கிரெடிட் கார்டு கடன் வரம்பு அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதைநம்பிய அவர், மர்மநபர் அனுப்பிய லிங்கில், தனது கிரெடிட் கார்டின் விவரங்களை பதிவிட்டார். பின், அவரது கார்ட்டில் இருந்த 2 லட்சத்து 26 ஆயிரத்து 381 ரூபாய் எடுத்துவிட்டனர்.
பிள்ளைச்சாவடியை சேர்ந்த நபர் 53 ஆயிரம், திலாஸ்பேட்டை நபர் 52 ஆயிரத்து 595, முத்தியால்பேட்டை நபர் 12 ஆயிரத்து 500 என, 4 பேர் மோசடி கும்பலிடம் 3 லட்சத்து 44 ஆயிரத்து 476 ரூபாய் இழந்துள்ளனர்.
சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.