/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேவதாஸ் பிறந்த நாள் 4ம் தேதி கொண்டாட்டம்
/
தேவதாஸ் பிறந்த நாள் 4ம் தேதி கொண்டாட்டம்
ADDED : ஏப் 26, 2025 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மூத்த காங்., தலைவர் தேவதாஸ் பிறந்த நாள் நிகழ்ச்சி வரும் ௪ம் தேதி கொண்டாடப் படும் என காமராஜ் நகர் தொகுதி காங்., கமிட்டி தெரிவித்துள்ளது.
இது குறித்து காமராஜ் நகர் தொகுதி காங்., கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், காமராஜ் நகர் தொகுதி பொறுப்பாளரும், புதுச்சேரிக்கான ஏ.ஐ.சி.சி., ஒருங்கிணைப்பாளருமான தேவதாஸ் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி இன்று 26ம் தேதி கொண்டாட திட்டமிடப்பட்டு இருந்தது.
அவர், வெளியூர் சென்றுள்ளதால் பிறந்த நாள் நிகழ்ச்சி அடுத்த மாதம் 4ம் தேதி காலை 10:00 மணியளவில் வெங்கட்டாநகர் தமிழ்ச்சங்கத்தில் நடக்கும் என, கூறப்பட்டுள்ளது.

