/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வளர்ச்சித்திட்ட பணிகள் ஆலோசனைக் கூட்டம்
/
வளர்ச்சித்திட்ட பணிகள் ஆலோசனைக் கூட்டம்
ADDED : ஏப் 14, 2025 04:25 AM

திருபுவனை: மதகடிப்பட்டு பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அங்காளன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது.
தலைமையாசிரியர் சகாயமேரி பாத்திமா வரவேற்றார். புதுச்சேரி பொதுப்பணித் துறையின் சிறப்பு கட்டடம் கோட்ட செயற்பொறியாளர் கெஜலட்சுமி, முதன்மை கல்வி அதிகாரி குலசேகரன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் விக்டோரியா, இளநிலை பொறியாளர் மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அங்காளன் எம்.எல்.ஏ., ஆலேசனை வழங்கி பேசுகையில், பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர தயாராக உள்ளோம். பெற்றோர்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் சாதனை படைக்கும் வகையில் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும்' என்றார்.

