/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திரா நகர் தொகுதியில் மேம்பாட்டு பணிகள் துவக்கம்
/
இந்திரா நகர் தொகுதியில் மேம்பாட்டு பணிகள் துவக்கம்
இந்திரா நகர் தொகுதியில் மேம்பாட்டு பணிகள் துவக்கம்
இந்திரா நகர் தொகுதியில் மேம்பாட்டு பணிகள் துவக்கம்
ADDED : மார் 17, 2025 02:44 AM
புதுச்சேரி: இந்திரா நகர் தொகுதியில் 62 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தொகுதி மேம்பாட்டு பணிகளை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி இந்திரா நகர் தொகுதியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் உழவர்கரை நகராட்சி மூலம் 62 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பீட்டில், தர்மாபுரி சந்தை தோப்பில் நாடகமேடை அமைத்தல், புரட்சித் தலைவி நகர் பூங்கா சீமைத்தல், தட்டாஞ்சாவடி மாதா கோவில் வீதியில் சைடு வாய்க்கால் மற்றும் சிமெண்ட் சாலை அமைத்தல், திலாஸ்பேட்டை காளி கோவில் வீதியில் அரசு கிளை நுாலகம் சீரமைத்தல் உள்ளிட்ட திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது.
முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். அரசு கொறடா ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.
உழவர்கரை நகராட்சி கமிஷனர் சுரேஷ்ராஜ் மற்றும் அதிகாரிகள், என்.ஆர்.காங்., பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.