/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.2.06 கோடியில் மேம்பாட்டு பணி; அமைச்சர் துவக்கி வைப்பு
/
ரூ.2.06 கோடியில் மேம்பாட்டு பணி; அமைச்சர் துவக்கி வைப்பு
ரூ.2.06 கோடியில் மேம்பாட்டு பணி; அமைச்சர் துவக்கி வைப்பு
ரூ.2.06 கோடியில் மேம்பாட்டு பணி; அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : டிச 30, 2025 05:35 AM

பாகூர்: பாகூர் தொகுதியில், 2 கோடியே 6 லட்சம் ரூபாய் செலவில், பாதுகாப்பு சுவர் அமைக்கும் பணிகளை, அமைச்சர் லட்சுமி நாராயணன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் துவக்கி வைத்தனர்.
புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்டம் சார்பில், பாகூர் தொகுதிக்குட்பட்ட சித்தேரி வாய்க்காலில், பாகூர் மாரியம்மன் கோவில் மதகு அருகிலும், பரிக்கல்பட்டு வாய்க்காலிலும் ஒரு கோடியே 20 லட்சத்து 85 ஆயிரத்து 919 ரூபாய் செலவில், பாதுகாப்புச் சுவர் அமைக்கவும், ஆராய்ச்சிக்குப்பம் சடகுளம் வாய்க்காலில், 85 லட்சத்து 18 ஆயிரத்து 294 ரூபாய் செலவில், பாதுகாப்பு சுவர் அமைக்க திட்டமிடப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பூமி பூஜை விழாவில், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், நீர்ப்பாசன கோட்டம் செயற்பொறியாளர் ராஜ்குமார், உதவி பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர் ஜெயரமணன் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

