/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஊசுடு தொகுதியில் பல்வேறு பணிகளுக்கு எம்.எல்.ஏ., பூமி பூஜை
/
ஊசுடு தொகுதியில் பல்வேறு பணிகளுக்கு எம்.எல்.ஏ., பூமி பூஜை
ஊசுடு தொகுதியில் பல்வேறு பணிகளுக்கு எம்.எல்.ஏ., பூமி பூஜை
ஊசுடு தொகுதியில் பல்வேறு பணிகளுக்கு எம்.எல்.ஏ., பூமி பூஜை
ADDED : டிச 30, 2025 05:35 AM

வில்லியனுார்: ஊசுடு தொகுதியில் பல்வேறு இடங்களில் ரூ. 1:54 கோடி திட்ட மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு பணிக்களுக்கு சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை துவக்கிவைத்தார்.
ஊசுடு தொகுதி அரசூர் எம்.எஸ் கார்டன் மற்றும் ராஜா நகர் பகுதியில் ரூ. 27 லட்சம் செலவில் புதிய தார்சாலை, கூடப்பாக்கம் மந்தவெளியில் ரூ. 7 லட்சம் புதிய கல்வெட்டு, கூடப்பாக்கம் சக்கர விநாயகர் கோவில் தெரு, ரைஸ் மில் தெரு மற்றும் தர்மாபுரி தெரு ஆகிய பகுதிகளில் ரூ. 23 லட்சம் திட்ட மதிப்பீட்டில் கழிவுநீர் வாய்க்கால் வசதியுடன் சிமென்ட் சாலைகள், கோனேரிகுப்பம் பள்ள வாய்க்கால் பகுதியில் ரூ. 24 லட்சம் திட்டமதிப்பீட்டில் கழிவுநீர் வாய்க்கால், பிள்ளையார்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவில் ரூ. 43லட்சம் திட்ட மதிப்பீட்டில் கழிவுநீர் வாய்க்கால் உட்பட மொத்தம் ரூ. 1: 54 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு உள் கட்டமைப்பு பணிகளை சாய் சரவணன்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து இளநிலை பொறியாளர் பிரதீப்குமார், அண்ணா பிரபாவதி, பா.ஜ நிர்வாகிகள் தியாகராஜன், அய்யனார், முத்தாலுமுரளி, மல்லிகா, என்.ஆர். காங்., நிர்வாகி தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

