/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ. 22. 48 லட்சத்தில் மேம்பாட்டு பணி பாகூர் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

ADDED : டிச 25, 2025 05:30 AM

பாகூர்: பாகூர் தொகுதியில், 22.48 லட்ச ரூபாய் செலவிலான மேம்பாட்டு பணிகளை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், பாகூர் தொகுதி பரிக்கல்பட்டு வி.கே.ஆர். கார்டன் பகுதியில் 8 லட்சத்து 35 ஆயிரம் 867 ரூபாய் செலவில், தார் சாலை அமைத்தல், பாகூர் கம்பன் நகரில் 11 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் செலவில், இணைப்பு தார் சாலை அமைத்தல், பாகூர் செட்டியார் சமூகத்தினருக்கான இடுகாட்டை 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில், மேம்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம், உதவி பொறியாளர் பாலமுருகன், இளநிலை பொறியாளர் திலகவதி, தி.மு.க., நிர்வாகிகள், ஊர் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.