/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பல்கலை மாணவியிடம் அத்துமீறல் முதல்வருடன் டி.ஜி.பி., ஆலோசனை
/
பல்கலை மாணவியிடம் அத்துமீறல் முதல்வருடன் டி.ஜி.பி., ஆலோசனை
பல்கலை மாணவியிடம் அத்துமீறல் முதல்வருடன் டி.ஜி.பி., ஆலோசனை
பல்கலை மாணவியிடம் அத்துமீறல் முதல்வருடன் டி.ஜி.பி., ஆலோசனை
ADDED : ஜன 22, 2025 07:48 AM

புதுச்சேரி : முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோருடன் டி.ஜி.பி., ஷாலினி சிங் ஆலோசனை நடத்தினர்.
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலையில் கடந்த 11ம் தேதி வாக்கிங் சென்ற வடமாநில மாணவியை, கல்லுாரி வளாகத்திற்குள் வந்த 4 வாலிபர் மறித்து தாக்கினர். இச்சம்பவம் தொடர்பாக தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அளித்த புகாரின்பேரில், அத்துமீறி நுழைதல், ஆபாசமாக பேசுதல் பிரிவின் கீழ் காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து 2 சிறார்கள் உட்பட 4 பேரை கைது செய்தனர். இதில் 2 அரசியல் பிரமுகர்களின் மகன்கள் என்பது குறிப்பிடதக்கது.
மாணவி நேரடியாக புகார் அளிக்க அரசியல் பிரமுகர்கள் மற்றும் கல்லுாரி நிர்வாகம் சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காங்., கட்சியும் இச்சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்தியது.
இதைத் தொடர்ந்து, முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் போலீஸ் டி.ஜி.பி., ஷாலினி சிங்கை நேற்று மதியம் புதுச்சேரி சட்டசபைக்கு வரவழைத்தனர்.
இருவரும், தொழில்நுட்ப பல்கலையில் மாணவி மீதான தாக்குதல், வழக்கு விபரம், போலீஸ் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து இப்பிரச்னையில் கடும் நடவடிக்கை எடுக்கவும், தேடப்பட்டு வரும் நபரை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டனர்.
மேலும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவும், கட்டாய ெஹல்மெட் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனை வழங்கினர்.