/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தீபாவளி பரிசு பொருட்கள் வாங்க கூடாது; போலீசாருக்கு டி.ஜி.பி., உத்தரவு

ADDED : அக் 18, 2025 07:51 AM
புதுச்சேரி: வெளியில் இருந்து கொடுக்கும், தீபாவளி பரிசு பொருட்களை போலீசார், தீயணைப்பு துறையினர் வாங்க கூடாது என, டி.ஜி.பி., ஷாலினிசிங் உத்தரவிட்டுள்ளார்.
அவரது உத்தரவில் கூறியிருப்பதாவது;
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தொழில் அதிபர்கள், வணிக நிறுவனங்கள், அரசியல் கட்சியினர், பிரமுகர்களிடம் இருந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையில் பணி செய்பவர்கள், தீபாவளி பரிசு பொருட்களை வாங்கி வருவதாக, ஒவ்வொரு ஆண்டும், புகார்கள் வருகின்றன.
கட்டாயப்படுத்தி பரிசு பொருட்களை வாங்கி வருவதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, போலீஸ் உயரதிகாரிகளுடன், டி.ஜி.பி., ஷாலினிசிங் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து, அந்தந்த சரகத்துக்குட்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் தெரிவிக்கும்படி டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார். பரிசு பொருட்கள் வாங்குதை தடுக்கும் விதமாக ரகசிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.