ஊர்க்காவல் படை வீரர் 'டிஸ்மிஸ்' போக்சோவில் சிக்கியதால் டி.ஜி.பி., அதிரடி
ஊர்க்காவல் படை வீரர் 'டிஸ்மிஸ்' போக்சோவில் சிக்கியதால் டி.ஜி.பி., அதிரடி
ADDED : ஜூன் 13, 2026 04:11 AM
அரியாங்குப்பம்: போக்சோ வழக்கில் தேடப்படும் ஊர்க்காவல் படை வீரரை பணியில் இருந்து 'டிஸ்மிஸ்' செய்ய டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி, வீராம்பட்டினம் பவானி நகரை சேர்ந்தவர் செல்வம் மகன் அனிஷ்குமார்,23; இவர் கடந்த 2019ம் ஆண்டு பள்ளியில் படித்தபோது, புதுச்சேரியை சேர்ந்த 15 மாணவியை காதலிப்பதாக கூறி, பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலத்காரம் செய்தார். அதில் சிறுமி கர்ப்பமடைந்தார்.
பின், கர்ப்பத்தை கலைத்துவிட்டு தொடர்ந்து அந்த சிறுமியிடம் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2025ம் ஆண்டு அனிஷ்குமார், ஊர்க்காவல் படை வீரர் பணியில் சேர்ந்து தற்போது உருளையன்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்தார். சிறுமிக்கு தற்போது, 22 வயது ஆனதை தொடர்ந்து திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். அதனை ஏற்க மறுத்த அனிஷ்குமார், அந்த பெண்ணுடனான தொடர்பை நிறுத்திக் கொண்டார்.
இதுகுறித்து அந்த பெண், தான் 15 வயது சிறுமியாக இருந்தபோது தன்னை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி, ஏமாற்றியது குறித்து அரியாங்குப்பம் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
இதனை அறிந்த டி.ஜி.பி., ஷாலினி சிங், போக்சோ வழக்கில் தேடப்பட்டு வரும் ஊர்க்காவல் படை வீரர் அனிஷ்குமாரை பணியில் இருந்து 'டிஸ்மிஸ்' செய்ய அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
