தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தனலட்சுமி சீனிவாசன் பல்கலை., புரிந்துணர்வு ஒப்பந்தம்

 தனலட்சுமி சீனிவாசன் பல்கலை., புரிந்துணர்வு ஒப்பந்தம்

 தனலட்சுமி சீனிவாசன் பல்கலை., புரிந்துணர்வு ஒப்பந்தம்


ADDED : பிப் 06, 2026 08:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 08:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம், ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி சார்பில், மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புகளை உயர்த்தும் நோக்கில், எஸ்.எஸ்.சி., நாஸ்காம் பியூச்சர் ஸ்கில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து செயல்படும் நாஸ்காம் பியூச்சர் ஸ்கில் திட்டத்தின் கீழ், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை தாங்கி, பேசுகையில், 'இன்று வேகமாக மாறும் தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு, மெய்நிகர் யதார்த்தம், மிகை யதார்த்தம், கிளவுட் கம்ப்யூட்டிங், தரவு அறிவியல், இணைய பாதுகாப்பு போன்ற துறைகள் எதிர்காலத்தின் முக்கிய தொழில்களாக உருவெடுத்து வரும் நிலையில், மாணவர்கள் பயிலும் காலத்திலேயே தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப தங்களின் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

இது மாணவர்களின் வளர்ச்சிக்கும், பல்கலைக்கழகத்தின் கல்வி தர உயர்விற்கும், இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றும். தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் பயிற்சிகளுக்கான அணுகல் வழங்கப்படுகிறது' என்றார்.

நாஸ்காம் பியூச்சர் ஸ்கில் இயக்குனர் உதய சங்கர், பல்கலைக்கழக கூடுதல் பதிவாளர் இளங்கோவன், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அதிகாரி நந்தகுமார், தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லுாரி முதல்வர் சண்முகசுந்தரம், துணை முதல்வர் அன்பரசன், பல்கலைக்கழக ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜியின் புல முதல்வர் வேல்முருகன், கல்லுாரி முதல்வர்கள் உமாதேவி பொங்கியா, முதல்வர் வெற்றிவேலன், மனிதவள மேம்பாட்டு துறை டீன் சண்முகசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us