/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தர்ம சம்ரக் ஷண சமிதி மகா சண்டி ஹோமம் கவுமாரி காயத்ரி அலங்காரத்தில் அருள்பாலிப்பு

ADDED : அக் 06, 2024 04:36 AM

புதுச்சேரி: தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில் நடக்கும் மகா சண்டி ஹோமத்தில் அம்மன் கவுமாரி காயத்ரி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில் 5ம் ஆண்டு சண்டி ஹோமம், இ.சி.ஆர்., சங்கர வித்யாலயா பள்ளி வளாகத்தில் கடந்த 3ம் தேதி துவங்கியது.
ஆதிபராசக்தியின் பெருமைகளை கூறும் சப்தசதீ என்கிற 700 ஸ்லோகங்கள், 13 அத்யாயங்கள் கொண்ட மந்திரங்களால் யாகம் நடக்கிறது.
மூன்றாம் நாளான நேற்று மயில் வாகனத்தில் கவுமாரி காயத்ரி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஹோமத்தில் தினசரி நடக்கும் கோ பூஜை, அஸ்வ பூஜை, சுவாஸினி பூஜை, தம்பதி பூஜை, வடுக பூஜை மற்றும் கன்யா பூஜைகள் நடந்தது. பல்வேறு விதமான ஹோம திரவியங்களோடு, 14 புடவைகள் சமர்பித்த பின்பு பட்டு புடவை தங்க தாலி சமர்பிக்கப்பட்டது. மகா பூரணாஹூதி, தீபாராதனைக்கு பின்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
லலிதா சகஸ்ரநாம பாராயணத்துடன் தொடங்கிய மாலை பூஜைகள், வேத பாராயணம், அம்பாளுக்கு மகா ஆரத்தி காண்பிக்கப்பட்டது. சரவணன் அருள் நாட்டியாலயா மாணவர்களின் பரதநாட்டியம் நடந்தது.