/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தர்ம சம்ரக்ஷண சமிதி சண்டி ஹோமம் இன்று துவக்கம்
/
தர்ம சம்ரக்ஷண சமிதி சண்டி ஹோமம் இன்று துவக்கம்
ADDED : அக் 03, 2024 05:02 AM
புதுச்சேரி : புதுச்சேரி தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில் 5ம் ஆண்டு சண்டி ஹோமம் இன்று 3ம் தேதி துவங்குகிறது.
புதுச்சேரி தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில் 5ம் ஆண்டு சண்டி ஹோமம், இ.சி.ஆர்., சங்கர வித்யாலயா பள்ளி வளாகத்தில் இன்று 3ம் தேதி துவங்கி 12ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான இன்று காலை 7:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கோபூஜை, அஸ்வபூஜையுடன் ஹோமம் துவங்குகிறது. ஆதிபராசக்தியின் பெருமைகளை கூறும் சப்தசதீ என்கிற 700 ஸ்லோகங்கள், 13 அத்யாயங்கள் கொண்ட மந்திரங்களால் யாகம் நடக்கிறது.
அத்யாத்திற்கு ஒன்றாக 13 முறை யாக பூஜை நடக்கும். அதில், ஒவ்வொரு முறையும், புடவை, பழங்கள், மங்கலப்பொருட்கள், மூலிகைகள் சேர்க்கப்படும்.
மகா பூர்ணாஹூதியில் ஒரு பட்டுபுடவை, தங்கதாலி, ஏராளமான மூலிகை பொருட்கள் சேர்க்கப்படும். ஆன்மீக பக்தர்கள் ஹோமத்தில் பங்கேற்று பயன்பெற தர்ம சம்ரக்ஷண சமதி அழைப்பு விடுத்துள்ளது.