/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தர்ம சம்ரக்ஷண சமிதியின் நாம சங்கீர்த்தன பூர்த்தி விழா
/
தர்ம சம்ரக்ஷண சமிதியின் நாம சங்கீர்த்தன பூர்த்தி விழா
தர்ம சம்ரக்ஷண சமிதியின் நாம சங்கீர்த்தன பூர்த்தி விழா
தர்ம சம்ரக்ஷண சமிதியின் நாம சங்கீர்த்தன பூர்த்தி விழா
ADDED : ஜன 14, 2025 06:34 AM

புதுச்சேரி: தர்ம சம்ரக்ஷண சமிதியின், 6ம் ஆண்டு மார்கழி மாத நகர்வல நாம சங்கீர்த்தன பூர்த்தி விழா நடந்தது.
சரவணன் அருள் நாட்டியாலா மாணவிகளின் நடனத்துடன், வேதபுரீஸ்வரர் கோவிலில் இருந்து நேற்று பஜனை புறப்பட்டது.
பிரதான வீதிகள் வழியாக பாகவதர்கள், மாணவ மாணவிகள் பஜனை பாடல்கள் பாடியபடி வலம் வந்தனர்.
மார்கழி மாதத்தின் 29 நாட்கள் நடந்த பஜனையில், பாகவதர்கள் சிவராமன், ஸ்ரீநிவாசன், பாரதியார் பல்கலைக்கூட உதவி பேராசிரியர் சத்யமூர்த்தி, சிவக்குமார், பாலமுரளி, காந்தி வீதி மற்றும் இ.சி.ஆர்., சங்கர வித்யாலயா பள்ளி, வாசவி வித்யாலயா, விவேகானந்தா பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
நிறைவு விழா, ஆர்ய வைஸ்ய வாசவி திருமண மண்டபத்தில் நடந்தது. பஜனையில் பங்கேற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ், நினைவு கேடயம் வழங்கப்பட்டது.
பஜனையில் பங்கேற்ற பாகவதர்கள், பஸ் வழங்கிய ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி நிர்வாகத்தினர் கவுரவிக்கப்பட்டு கேடயம் வழங்கப்பட்டது.

