தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டீசல் கடத்திய லாரி பறிமுதல்

 டீசல் கடத்திய லாரி பறிமுதல்

 டீசல் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : ஜூன் 01, 2026 09:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 09:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு டீசல் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி, போதைப்பொருள் தடுப்பு பிரிவு உதவி சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.

அப்போது, புதுச்சேரியில் இருந்து, தமிழக பகுதிக்கு டீசல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் ரோந்து சென்றபோது, 100 அடி சாலையில் உள்ள பெட் ரோல் பங்கில் இருந்து புறப் பட்ட லாரியை மடக்கி, சோதனை நடத்தினர்.

அந்த லாரியில் டீசலுக்கு உண்டான உரிமம், முறையான ஆவணம் எதுவும் இல்லை. போலீசார் விசாரணையில் லாரியை ஓட்டி வந்தவர் வந்தவாசி ஜம்மம்பட்டு பகுதியை சேர்ந்த பாபு, 53; என்பதும் அவர் புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு டீசல் கடத்தி சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரையும், லாரியையும் போலீசார், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து, பாபுவை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர். டீசல் கடத்தல் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us