/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பல்வேறு கட்சியினர் பா.ஜ.,வில் ஐக்கியம்
/
பல்வேறு கட்சியினர் பா.ஜ.,வில் ஐக்கியம்
ADDED : ஜன 29, 2026 05:31 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்டவர்கள், பா.ஜ.,வில் இணைந்தனர்.
புதுச்சேரி இந்திரா நகர் தொகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் தலைமையில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்டவர்கள், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் முன்னிலையில் நேற்று இணைந்தனர்.
பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாநில இளைஞர் அணி தலைவர் ஆடல் அரசன், உழவர்கரை மாவட்ட தலைவர் உலகநாதன், இளைஞர் அணி தலைவர் ராஜசேகர், மாநில ஊடகத்துறை தலைவர் நாகேஸ்வரன், மாவட்ட பொதுச்செயலாளர் ரமண சங்கர் உள்ளிட்ட பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றிப்பெற இளைஞர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என மாநில தலைவர் பேசினார்.

