/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் கரன்சி சிறப்பு நிகழ்ச்சி
/
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் கரன்சி சிறப்பு நிகழ்ச்சி
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் கரன்சி சிறப்பு நிகழ்ச்சி
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் கரன்சி சிறப்பு நிகழ்ச்சி
ADDED : டிச 20, 2024 04:05 AM

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் டிஜிட்டல் கரன்சியில் வளர்ந்து வரும் போக்குகள் குறித்த சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி பல்கலைக்கழக மேலாண்மை பள்ளி வங்கி தொழில்நுட்பத் துறை, இந்திய ரிசர்வ் வங்கியுடன் இணைந்து, பின்டெக் மற்றும் சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சியில் வளர்ந்து வரும் போக்குகள் குறித்த சிறப்பு நிகழ்ச்சி, பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தில் நடந்தது.
புதுவை பல்கலைக்கழக வங்கி தொழில்நுட்பத் துறை தலைவர் மாரியப்பன் வரவேற்றார். பல்கலைக் கழக துணை வேந்தர் தரணிக்கரசு தலைமை தாங்கி, நிதித்துறையை மறுவரையறை செய்வதில் தொழில்நுட்பத்தின் பங்கு குறித்தும், வங்கி மற்றும் பின்டெக் ஆகியவற்றில் வளர்ந்து வரும் சவால்கள், வாய்ப்புகளுக்கு செல்ல தேவையான திறன்கள் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில் மும்பை ரிசர்வ் வங்கியின் துணை பொது மேலாளர் சிரின் குமார், துணைப் பொது மேலாளர் முரளிதர் மஞ்சலா ஆகியோர் பின்டெக் மற்றும் சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சியின் வளர்ந்து வரும் போக்குகள் பற்றிய விரிவான கண்ணோட்டத்தை வழங்கினர்.
இதில் வேகமாக வளர்ந்து வரும் நிதியியல் தொழில்நுட்ப நிலப்பரப்பு பற்றிய வலுவான கருத்துக்கள் மற்றும் நுண்ணறிவு பரிமாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது.
எம்.பி.ஏ., வங்கி தொழில்நுட்ப மாணவர் நன்றி கூறினார்.