தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் கல்வி கருத்தரங்கம்

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் கல்வி கருத்தரங்கம்

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் கல்வி கருத்தரங்கம்


UPDATED : நவ 22, 2026 06:19 PM

ADDED : நவ 22, 2026 06:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2026 06:19 PM ADDED : நவ 22, 2026 06:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் கல்வி குறித்த இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு நடந்தது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கல்வி பல்லுாடக ஆராய்ச்சி மையம், டில்லியில் உள்ள கல்வி தொடர்பாடலுக்கான கூட்டமைப்புடன் இணைந்து ‘இந்தியாவில் டிஜிட்டல் கல்வி: உள்ளடக்கிய மற்றும் பொறுப்பான டிஜிட்டல் கல்விக்கான செயற்கை நுண்ணறிவு சூழலமைப்பை நோக்கி’ என்ற தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கை நடத்தின.

கல்வி பல்லுாடக ஆராய்ச்சி மைய இக்குனர் ஷாஜிப் முகமது ஹனிப் வரவேற்றார். துணை வேந்தர் பிரகாஷ்பாபு தலைமை தாங்கினார். ைஹதராபாத்தில் உள்ள ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பல்கலை கழகத்தின் பேராசிரியர் ஸ்ரீகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். லெனடார்ஸ் நிறுவன இணை நிறுவனர் ஸ்ரீவித்யாகுமார், கூட்டமைப்பின் இயக்குனர் பரிஜித் சிங் மன்னாஸ், பல்கலை ஊடகம் மற்றும் தொடர்பியல் புலமுதல்வர் கேசவன், விபோத் பார்த்தசாரதி, லாப்மோகன், ஓய்வு பெற்ற பேராசிரியர் உஷா ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு டிஜிட்டல் கல்வியின் வாய்ப்புகள், சவால்கள், மற்றும் செயற்கை நுண்ணறிவின் வளர்ந்து வரும் பங்கு குறித்து விவாதித்தனர். பேராசிரியர் அருள்செல்வன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us