ஆனந்தரங்கப்பிள்ளை சிறப்பு பள்ளியில் டிஜிட்டல் ஆய்வகம் திறப்பு
ஆனந்தரங்கப்பிள்ளை சிறப்பு பள்ளியில் டிஜிட்டல் ஆய்வகம் திறப்பு
ADDED : செப் 23, 2026 05:48 AM

புதுச்சேரி: ஆனந்தரரங்கப்பிள்ளை வீதியில் உள்ள சிறப்பு பள்ளியில் டிஜிட்டல் கற்றல் வசதி ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.
சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் ஆனந்தரங்க பிள்ளை அரசு சிறப்பு பள்ளியில், அப்பாசாமி அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன சமூகப் பொறுப்புணர்வு திட்ட நிதியில் பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான முழுமையான டிஜிட்டல் கற்றல் வசதியுடன் கூடிய 'டிஜிட்டல் உதவித் தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு, சிறப்பு விருந்தினராக சமூக நலத்துறை அமைச்சர் சிவக்கொழுந்து கலந்து கொண்டு ஆய்வகத்தைத் திறந்து வைத்தார்.
அரசு செயலாளர் மற்றும் தொழிலாளர் நல ஆணையர் ஸ்மிதா, சமூக நலத்துறை இயக்குநர் ராகினி, அப்பாசாமி அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன தலைமை செயல் அதிகாரி செந்தில்குமார், அரசு விவகாரங்கள் பிரிவின் துணை தலைவர் ராஜீவ்நந் தன் முன்னிலை வகித்தனர்.
சிறப்புப் பள்ளியின் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் சமூக நலத்துறையின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த டிஜிட்டல் ஆய்வகம் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இன்குபேஷன் சென்டர் பவுண்டேஷன் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
