தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இடைத்தேர்தலில் பயன்படுத்தும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சீல் வைப்பு! வேட்பாளர்களின் சின்னம் வரும் 25ம் தேதி பொறுத்தம்

இடைத்தேர்தலில் பயன்படுத்தும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சீல் வைப்பு! வேட்பாளர்களின் சின்னம் வரும் 25ம் தேதி பொறுத்தம்

இடைத்தேர்தலில் பயன்படுத்தும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சீல் வைப்பு! வேட்பாளர்களின் சின்னம் வரும் 25ம் தேதி பொறுத்தம்

1


UPDATED : செப் 22, 2026 10:43 PM

ADDED : செப் 22, 2026 10:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 22, 2026 10:43 PM ADDED : செப் 22, 2026 10:14 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில், பயன்படுத்த கூடிய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இறுதி செய்யப்பட்டு, ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளது.

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்., சார்பில் அசோக் ஆனந்த், காங்., சார்பில் விநாயகம், தி.மு.க., சார்பில் சேதுசெல்வம், இந்திய கம்யூ., சலீம், இந்திய குடியரசு கட்சி கலைவாணன், நா.த.க., கார்த்திகுமாரி, ஐந்து சுயேச்சைகள் உட்பட 14 பேர் 15 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யதனர்.

இதில், மனுக்கள் பரிசீலனைக்குப் பின் பிரதான கட்சிகளின் மாற்று வேட்பாளர்கள், 3 பேர் நா.த.க., வேட்பாளர் கார்த்திகுமாரி தாக்கல் செய்த இரண்டு வேட்பு மனுக்களில் ஒன்று தள்ளுபடி செய்யப்பட்டு, இறுதியாக 11 வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, பின் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், மின்னணு ஓட்டுபதிவு இயந்திரங்கள் முதற்கட்ட பரிசோதனை செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து, சரிபார்க்கப்பட்ட இயந்திரங்களில் இருந்து இடைத்தேர்தலில், பயன்படுத்துவதற்காக, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் (இ.வி.எம். மற்றும் வி.வி.பாட்) ஓட்டுச்சாவடி வாரியாக ஒதுக்கீடு செய்தல், இரண்டாம் கட்ட தற்செயல் கலப்பு முறை தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட இ.வி.எம்., மேலாண்மை மென்பொருள் 2.0 மூலம் தேர்தல் நடத்தும் அதிகாரி், வேட்பாளர்கள் மற்றும் பொது பார்வையாளர் முன்னிலையில் நேற்று காலை நடந்தது.

தட்டாஞ்சாவடி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரி அர்ஜூன் ராமகிருஷ்ணன் முன்னிலையில், நடந்த நிகழ்ச்சியில், இரண்டாம் கட்ட தற்செயல் கலப்பு நிறைவடைந்தது.

ஓட்டுசாவடியாக வாரியாக மின்னணு ஓட்டுபதிவு இயந்திரங்கள், இ.வி.எம். மற்றும் வி.வி.பாட் ஆகியவற்றின் பட்டியல் மற்றும் இருப்பு இயந்திரங்களின் பட்டியல் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, மோதிலால் நேரு அரசு தொழில்நுட்ப கல்லுாரியில் உள்ள ஸ்ட்ராங் ரூமில், ஓட்டு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு சீலிடப்பட்டது.

இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி:

இதனை தொடர்ந்து வரும் 25ம் தேதி மின்னணு ஓட்புப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளர்களின் சின்னம் பொறிக்கப்பட்ட ஓட்டுச்சீட்டு பொருத்தப்பட்டு, தேர்தலுக்கு தயார் படுத்தும் பணி நடக்கிறது. பின்னர் கல்லுாரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us