sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 முருங்கப்பாக்கத்தில் டிஜிட்டல் முறையில் நில அளவிடும் பணிகள் 5ம் தேதி துவக்கம்

/

 முருங்கப்பாக்கத்தில் டிஜிட்டல் முறையில் நில அளவிடும் பணிகள் 5ம் தேதி துவக்கம்

 முருங்கப்பாக்கத்தில் டிஜிட்டல் முறையில் நில அளவிடும் பணிகள் 5ம் தேதி துவக்கம்

 முருங்கப்பாக்கத்தில் டிஜிட்டல் முறையில் நில அளவிடும் பணிகள் 5ம் தேதி துவக்கம்


ADDED : மார் 03, 2026 04:03 AM

Google News

ADDED : மார் 03, 2026 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி நில அளவை மற்றும் பதிவேடுகள் இயக்ககம் சார்பில் புதிய டிஜிட்டல் முறையில் முருங்கப்பாக்கத்தில் தனியார் நிலங்கள், மனைகள், அளவிடும் பணி வரும் 5ம் தேதி முதல் துவங்குகிறது.

இதுகுறித்து துறையின் இயக்குநர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரியில் பழைய சங்கிலி முறைக்கு மாற்றாக அறிவியல் உபகரணங்களைக் கொண்டு செயற்கைக் கோள்கள் துணையுடன் புதிய டிஜிட்டல் முறையில் நில அளவை செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது.

அதன்படி, முருங்கப்பாக்கம் கிராமம் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசு நில அளவைத் துறையின் ஏற்பாட்டில் முதற்கட்டமாக அரசு நிலங்கள், கட்டடங்கள், சாலைகள், நீர் நிலைகள் ஆகியவை அளவிடும் பணிகள் துவங்கப்பட்டு தற்போது முடிவடைந்துள்ளன.

அடுத்த கட்டமாக, முருங்கப்பாக்கம் கிராமத்திலுள்ள தனியார் நிலங்கள், வீட்டு மனைகள், வீடுகள், கட்டடங்கள் மற்றும் பிற தனியார் இடங்களை அளவிடும் பணிகள் வரும் 5ம் தேதி முதல் 27 ம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் தினசரி காலை 7 மணி முதல் நடைபெற உள்ளது.

எனவே, முருங்கப்பாக்கம் வருவாய் கிராமத்தில் நிலங்கள், கட்டடங்கள், வீடுகள் மற்றும் வீட்டு மனைகள் உள்ளிட்டவை வைத்திருப்போர், தங்களது இடங்கள் மீதான உரிமையை விளக்கும் ஆவணங்கள், ஆதார் அட்டை மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட சுய விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மேலும், அந்த இடங்களை துறையின் நில அளவர்கள் சிரமமின்றி அளவீடு செய்வதற்கு ஏதுவாக, தேவையற்ற செடிகள், புதர்கள் ஆகியவற்றை உடனடியாக அகற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us