வேளாண்துறை அலுவலர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப பயிற்சி
வேளாண்துறை அலுவலர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப பயிற்சி
ADDED : ஆக 19, 2026 08:01 PM
புதுச்சேரி: வேளாண்துறை அலுவலர்களுக்கு விநியோகம் மற்றும் மதிப்பு சங்கிலி மேலாண்மையில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி வகுப்பு துவங்கியது.
விரிவாக்க கல்வி நிறுவனம், ைஹதராபாத் மற்றும் மாநில வேளாண்மை, மேலாண்மை விரிவாக்க பயிற்சி நிறுவனம் ஆகியன இணைந்து, புதுச்சேரி குரும்பாட்டு காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் வேளாண்துறை அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பை துவக்கின.
5 நாட்கள் நடக்கும் பயிற்சியில், விநியோகம் மற்றும் மதிப்பு சங்கிலி மேலாண்மையில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. ராஜிவ்காந்தி கால்நடை கல்லுாரி முதல்வர் முருகவேல் துவக்கி வைத்தார்.
காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய இயக்குநர் ரவி வரவேற்றார். விரிவாக்க கல்வி நிறுவன ைஹதராபாத் உதவிப் பேராசிரியர் ராஜா மதுசேகர் சிறப்புரையாற்றினார். பேராசிரியர் சிவசுப்ரமணியன் நன்றி கூறினார்.
