தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முன்னாள் ராணுவ சங்கத்தினர் அமைச்சரிடம் கோரிக்கை மனு

முன்னாள் ராணுவ சங்கத்தினர் அமைச்சரிடம் கோரிக்கை மனு

முன்னாள் ராணுவ சங்கத்தினர் அமைச்சரிடம் கோரிக்கை மனு


ADDED : ஆக 19, 2026 07:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2026 07:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தின் தலைவர் பெருமாள் தலைமையில் நிர்வாகிகள், அமைச்சர் ராஜசேகரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவில், முன்னாள் ராணுவத்தினர் மூலம் ஆண்டு தோறும் நடத்தபடும் பேரணி, கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ளது. அதனை ஆண்டு தோறும் தவறாமல் நடத்த வேண்டும்.  முன்னாள் ராணுவத்தினர் நலத்துறைக்கு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவரை நிரந்தர இயக்குனராக நியமிக்க வேண்டும். எல்.டி.சி., மற்றும் யு.டி.சி., போட்டித் தேர்வுகளில் முன்னாள் ராணுவத்தினருக்குத் தட்டச்சு தகுதியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

அரசுத் துறைகளில் காலியாக உள்ள முன்னாள் ராணுவத்தினருக்கான இடங்களை நிரப்ப சிறப்புத் தேர்வுகளை நடத்த வேண்டும். எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பில் முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகளுக்கு தற்போது வழங்கப்படும் 1 சதவீத  இடஒதுக்கீட்டை 3 சதவீதமாக உயர்த்த வேண்டும்.  கடந்த 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள முன்னாள் ராணுவத்தினருக்கான இலவச மனைப்பட்டாவை உடனடியாக வழங்கிட வேண்டும் உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 

சந்திப்பின்போது, நிர்வாகிகள் ஜோதி குமார், தேவராஜ், நிலவண்ணன், பாலையா, குப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us