தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி எம்.எல்.ஏ.,களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம்

புதுச்சேரி எம்.எல்.ஏ.,களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம்

புதுச்சேரி எம்.எல்.ஏ.,களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம்


ADDED : ஆக 19, 2026 07:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2026 07:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பட்ஜெட் கூட்ட தொடர் வரும் 24ம் தேதி துவங்க உள்ள சூழ்நிலையில், எம்.எல்.ஏ.,க்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது.

புதுச்சேரியில் 16-வது சட்டசபை  எம்.எல்.ஏ.,க்களுக்கான அறிமுக புத்தாக்க பயிற்சி முகாம், ஓட்டல் சிவகவியில் நேற்று நடந்தது. சட்டசபை செயலர் தயாளன் வரவேற்றார். முகாமை தலைமை தாங்கி, துவக்கி வைத்த சபாநாயகர் அன்பழகன், கேள்வி நேரம், பூஜ்ஜிய நேரம், கவன ஈர்ப்பு மற்றும் பிற சட்டசபை நடைமுறைகள் குறித்து எடுத்துரைத்தார்.

 எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம், செம்மையான அரசு நிர்வாகத்தில் சட்டப்பேரவையின் பங்கு குறித்தும், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், சட்டசபைகள் குழுக்கள் குறித்து பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ., இளங்கோ, சட்டசபை மாண்புகள் மற்றும் நடைமுறைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

சார்பு செயலர் ஜான்சி, சட்டசபையும் சட்டம் இயற்றுதல் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். ஓய்வுபெற்ற வரவு செலவு திட்ட அலுவலர் பொன்னுசாமி, நிதி ஒதுக்கீடு செயல்முறை குறித்து எடுத்துரைத்தார். சட்டசபை செயலக செயலர் தயாளன், எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம், படிகள் மற்றும் இதர வசதிகள் குறித்து உரையாற்றினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us