ADDED : ஆக 19, 2026 07:54 PM
அ நிறம் | அளவு
பாகூர்: பொறியியல் கல்லுாரி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் பேப்பர் மில் சாலையைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் பிரவீனா 20; தனியார் பொறியியல் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் கடந்த 16ம் தேதி மாலை, தனது தங்கையை கிருமாம்பாக்கத்தில் உள்ள ஒரு டியூஷன் சென்டரில் விடுவதற்காக ஸ்கூட்டியில் சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர், பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
