/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டிஜிட்டலுக்கு மாறிய கட்டணக் கழிப்பிடம்
/
டிஜிட்டலுக்கு மாறிய கட்டணக் கழிப்பிடம்
ADDED : பிப் 28, 2024 07:21 AM

புதுச்சேரி : புதுச்சேரி கடற்கரை கட்டண கழிப்பிடம் டிஜிட்டலுக்கு மாறி கியூஆர் கோடு மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
புதுச்சேரி கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக, பழைய சாராய ஆலை அருகே நகராட்சி கட்டணக் கழிப்பிடம் உள்ளது. ரூ. 5 மற்றும் ரூ. 10 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், கழிப்பிடம் வருவோரிடம் ரூ. 5, ரூ.10 சில்லரை பெரும் பிரச்னையாக உள்ளது. சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் ஜிபே, பே டி எம். உள்ளிட்ட டிஜிட்டல் முறையில் பணம் பரிமாற்றம் செய்கின்றனர்.
இதனால் பழைய சாராய ஆலை எதிரில் உள்ள கட்டண கழிப்பறையில் டிஜிட்டல் முறையில் கட்டணம் வசூலிக்கும் கியூர் ஆர் கோட் வைக்கப்பட்டுள்ளது. கழிப்பறை பயன்படுத்தும் சுற்றுலா பயணிகள் கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்து கட்டணத்தை செலுத்துகின்றனர்.

