தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'தினமலர் - நீட்' மாதிரி தேர்வு முன்பதிவு நாளை துவக்கம்

'தினமலர் - நீட்' மாதிரி தேர்வு முன்பதிவு நாளை துவக்கம்

'தினமலர் - நீட்' மாதிரி தேர்வு முன்பதிவு நாளை துவக்கம்


ADDED : ஏப் 13, 2025 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2025 05:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : 'தினமலர்' நாளிதழ் நடத்தும் 'நீட்' மாதிரி தேர்விற்கு முன்பதிவு நாளை துவங்குகிறது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., போன்ற மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு, வரும் மே 4ம் தேதி நாடு முழுவதும் நடை பெற உள்ளது.

இந்தியா முழுவதும் 23 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுத தயாராகி வருகின் றனர்.

தமிழகம், புதுச்சேரியில் 'நீட்' நுழைவு தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் டாக்டர் கனவினை நிறைவேற்றிட 'தினமலர்' நாளிதழ், ஸ்பெக்ட்ரா நிறுவனத்துடன் இணைந்து, 'நீட்' மாதிரி தேர்வினை வரும் 20ம் தேதி நடத்த உள்ளது.

மாணவர்களுக்கு 'நீட்' தேர்வு குறித்த அச்சத்தை போக்க இந்த மாதிரி தேர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வு உண்மையான 'நீட்' தேர்வு போன்றே நடத்தப்பட உள்ளது.

இத்தேர்வில் பங்கேற் பதன் மூலம் தன்னம்பிக்கை பெற்று, 'நீட்' தேர்வை தயக்கமின்றி எழுதிடலாம்.

இத்தேர்விற்கு, முன்பதிவு செய்த மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.

இதற்கான முன்பதிவு நாளை 5ம் தேதி துவங்குகிறது. முன்பதிவிற்கு நாளைய 'தினமலர்' நாளிதழை தவறாமல் பார்க்கவும்.

'தினமலர்' நாளிதழின் இந்த அரிய வாய்ப்பை 'மிஸ்' பண்ணிடாதீங்க...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us