/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி
/
'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி
ADDED : ஜன 21, 2026 05:27 AM

புதுச்சேரி: மூலக்குளம், ஆச்சார்யா சிக் ஷா மந்திர் பள்ளியில் நடந்த 'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மூலக்குளம், ஆச்சார்யா சிக் ஷா மந்திர் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' நாளிதழின் வினாடி வினா போட்டி நடந்தது. இதில் பள்ளியை சேர்ந்த 8 அணிகள் பங்கேற்றன.
இந்த போட்டியில், 8 ம் வகுப்பு மாணவிகள் லிடியா, ஜெயஸ்ரீ முதலிடத்தையும், 6ம் வகுப்பு மாணவர்கள் லோகேஷ் சாய் குமார், தன்வீர் அகமது 2ம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர். இதையடுத்து, பட்டம் வினாடி வினா இறுதி போட்டிக்கு தேர்வான மாணவர்களை பள்ளியின்ஆசிரியர் வைணவி (எ) இலக்கியா ஆகியோரை பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

