/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'தினமலர்- பட்டம்' வினாடி வினா போட்டி
/
'தினமலர்- பட்டம்' வினாடி வினா போட்டி
ADDED : ஜன 22, 2026 05:47 AM

பாகூர்: தவளக்குப்பம் நேஷனல் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் நடந்த 'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தவளக்குப்பம் நேஷனல் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' நாளிதழின் வினாடி வினா போட்டி நடந்தது. இதில் பள்ளியை சேர்ந்த 8 அணிகள் பங்கேற்றன. 6ம் வகுப்பு மாணவர்கள் ஷர்வன், யஸ்வந்த் முதலிடத்தையும், 6ம் வகுப்பு மாணவர்கள் தஷ்வந்த்ராஜ், ஸ்ரீநாத் 2ம் இடத்தையும் பிடித்தனர்.
இதையடுத்து, பட்டம் வினாடி வினா இறுதி போட்டிக்கு தேர்வான மாணவர்களை, பள்ளியின் தாளாளர் எழிலரசி கிரண்குமார் பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். தலைமையாசிரியர் உமா மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

