/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி வினா போட்டி புதுச்சேரியில் இன்று நடக்கிறது
/
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி வினா போட்டி புதுச்சேரியில் இன்று நடக்கிறது
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி வினா போட்டி புதுச்சேரியில் இன்று நடக்கிறது
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி வினா போட்டி புதுச்சேரியில் இன்று நடக்கிறது
ADDED : ஜன 28, 2025 06:19 AM
புதுச்சேரி: தினமலர் - பட்டம்' இதழ் சார்பில் மெகா வினாடி வினா போட்டி இன்று புதுச்சேரியில் நடக்கிறது.
புதுச்சேரி 'தினமலர் - பட்டம்' இதழ் மற்றும் ஆச்சார்யா கல்விக் குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் பரிசு வெல்' என்ற மெகா வினாடி வினா போட்டி, இன்று 28ம் தேதி, ஜிப்மர் வளாகத்தில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆடிட்டோரியத்தில் நடக்கிறது.
மெகா வினாடி வினா போட்டியில் பங்கேற்க, புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 150 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடத்தப்பட்ட பள்ளி அளவிலான வினாடி வினா போட்டியில் 35,000 மாணவர்கள் பங்கேற்றனர்.
ஒவ்வொரு பள்ளியிலும், முதல் நிலை தேர்வு நடத்தி அதிக மதிப்பெண் பெறும் 16 பேர் 2ம் கட்ட போட்டிக்கு தேர்வாகினர். தலா 2 பேர் கொண்ட 8 அணிகளாக பிரிக்கப்பட்டு, இரண்டாம் கட்ட போட்டி நடத்தப்பட்டது.
இப்போட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடித்த 300 அணிகள், ஒரு அணிக்கு தலா 2 மாணவர்கள் வீதம் 600 மாணவ மாணவிகள் மெகா வினாடி வினா போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இன்று காலை 7:35 மணி முதல், மாணவர் வருகை பதிவுடன் நிகழ்ச்சி துவங்குகிறது. வினாத்தாள் வழங்கப்பட்டு முதற்கட்ட எழுத்து தேர்வு நடக்கவுள்ளது.
இதில் அதிக மதிப்பெண் பெறும் 16 பேர் கொண்ட 8 அணிகள் இறுதிச்சுற்று போட்டியில் பங்கேற்கும்.
வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு, சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கும் புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன், தேசிய மனித உரிமைகள் ஆணைய நீதிபதி ராமசுப்ரமணியன், ஆச்சார்யா கல்விக் குழுமத்தின் தலைவர் அரவிந்தன் ஆகியோர் பரிசு வழங்கி சிறப்புரையாற்றுகின்றனர்.
மெகா வினாடி வினா போட்டிக்கு, பள்ளி அளவில் தேர்வான மாணவ மாணவிகள் காலை 7:30 மணிக்கு முன்னதாக நிகழ்ச்சி இடத்திற்கு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

