/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தினமலர் 'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்ப நிகழ்ச்சி புதுச்சேரியில் இன்று இரு இடங்களில் நடக்கிறது

ADDED : அக் 02, 2025 01:50 AM
புதுச்சேரி: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பு பட்டம் இதழ் நடத்தும் 'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்ப நிகழ்ச்சி புதுச்சேரியில் இன்று இரு இடங்களில் நடக்கிறது.
'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் நடத்தும் 'அ'னா... 'ஆ'வன்னா.. அரிச்சுவடி ஆரம்பம் எனும் வித்யாரம்பம் நிகழ்ச்சி, விஜயதசமி நாளான, இன்று 2ம் தேதி காலை 8:00 மணி முதல் புதுச்சேரி, லாஸ்பேட்டை, செல்லபெருமாள் பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி மற்றும் கோர்க்காடு, பாகூர் சாலையில் உள்ள 'தி ஸ்காலர்' சி.பி.எஸ்.இ., பள்ளியில் கோலாகலமாக நடக்கிறது.
இதில் இரண்டரை முதல் மூன்றரை வயதிற்குட்பட்ட மழலைகளின் விரல் பிடித்து பிரபல கல்வியாளர்கள், மருத்துவர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பிரபலங்கள் 'அ--ஆ' எழுதி பழக்க உள்ளனர்.
நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று குழந்தைகளை வாழ்த்தி அகரம் கற்பிக்க உள்ளனர். அவர்களது ஆரம்ப நிலை கல்வியறிவு தான் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அறிவாற்றலும், நற்பண்புகளுக்கும் துணை நிற்கிறது. விஜயதசமி திருநாள் கல்வியை கற்கும் வித்யாரம்பத்துக்கு உகந்த நாள்.
இந்நாளில் உங்கள் வீட்டு இளந்தளிர்களின் பிஞ்சுவிரல் பிடித்து அரிச்சுவடியை ஆரம்பித்து வைக்க கல்வியாளர்கள், உயர் அதிகாரிகள் காத்திருக்கிறார்கள்.
கல்வி கோவிலுக்கு அடியெடுத்து வைக்க கல்வி செல்வம் கிடைக்க, செல்ல குட்டீஸ்களை அழைத்து வாங்க...
நிகழ்ச்சியில், முன் பதிவு செய்த குழந்தைகள் மட்டுமே பங்கேற்க முடியும். பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும் 'ஸ்கூல் கிட்' இலவசமாக வழங்கப்படும்.