தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தினமலர் பட்டம்:  வாழ்க்கையே பொழுதுபோக்காக மாறக்கூடாது  

தினமலர் பட்டம்:  வாழ்க்கையே பொழுதுபோக்காக மாறக்கூடாது  

தினமலர் பட்டம்:  வாழ்க்கையே பொழுதுபோக்காக மாறக்கூடாது  


ADDED : ஆக 28, 2026 09:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 09:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

‘தினமலர்–பட்டம்’ இதழ் வினாடி வினா போட்டியை துவக்கி வைத்த ஆந்திர சுகாதார துறை அமைச்சர் சத்ய குமார் யாதவ், மேடையில் ஏறி பேச ஆரம்பித்ததும், ‘நடிகர் விஜயின் புதிய படம் எது’ என்று கேள்வி கேட்டு அரங்கினை கலகலப்பாக்கினர். உடனே அரங்கில் இருந்த மாணவர்கள் அனைவரும்,  ‘ஜனநாயகன்’ என்று ஒரே குரலில் பதிலளித்தனர். 

இதை கேட்ட சுகாதார அமைச்சர் சத்ய குமார் யாதவ்,‘பார்த்தீர்களா, உங்களுக்கு எல்லாவற்றைப் பற்றியும் யோசனை இருக்கிறது. நல்ல விஷயம் தான். பொழுதுபோக்கு முக்கியம் தான், ஆனால் வாழ்க்கையே பொழுதுபோக்காக மாறக்கூடாது. புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

தினமும் ஒரு மணிநேரம் அல்லது ஒன்றரை மணிநேரம், அதிகபட்சமாக இரண்டு மணிநேரம் பொழுதுபோக்கிற்காக செலவிடலாம்.

பிறகு நீங்கள் கேள்விகளும் கேட்க வேண்டும். நீங்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்வியிலிருந்தும் புதிய அறிவை பெறுவீர்கள்.

எனவே மொபைல் போன்களில் நேரத்தை செலவழிப்பதற்கு பதிலாக, பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதிலாக, புதிய விஷயங்களை தெரிந்துகொள்ள நேரத்தை செலவிடுங்கள். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் வந்தால், உங்கள் ஆசிரியரிடம் கேளுங்கள், உங்கள் பெற்றோரிடம் கேளுங்கள், உங்களுடன் படிக்கும் மாணவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் என உருக்கமாக வேண்டுகோள் வைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us