sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

'தினமலர்' நீட் மாதிரி நுழைவு தேர்விற்கு முன்பதிவு இன்றுடன் நிறைவு டாக்டர் கனவு நனவாக மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

/

'தினமலர்' நீட் மாதிரி நுழைவு தேர்விற்கு முன்பதிவு இன்றுடன் நிறைவு டாக்டர் கனவு நனவாக மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

'தினமலர்' நீட் மாதிரி நுழைவு தேர்விற்கு முன்பதிவு இன்றுடன் நிறைவு டாக்டர் கனவு நனவாக மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

'தினமலர்' நீட் மாதிரி நுழைவு தேர்விற்கு முன்பதிவு இன்றுடன் நிறைவு டாக்டர் கனவு நனவாக மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு


ADDED : ஏப் 19, 2025 04:41 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: 'தினமலர்' நாளிதழ், ஸ்பெக்ட்ரா நிறுவனத்துடன் இணைந்து நடத்தும், 'நீட்' மாதிரி தேர்வு, நாளை 20ம் தேதி புதுச்சேரியில் பிரமாண்டமாக நடக்கிறது. மாதிரி தேர்வு என்றாலும், தேசிய தேர்வு முகமை நடத்தும் அசல் தேர்வு போன்றே நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவப் படிப்புகளுக்கான, நீட் தேர்வு, மே 4ம் தேதி நாடு முழுதும் நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத லட்சக்கணக்கான மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.

தமிழகம், புதுச்சேரியில் 'நீட்' நுழைவு தேர்விற்கு தயாராகும் மாணவர்களின் டாக்டர் கனவை நிறைவேற்றிட 'தினமலர்' நாளிதழ், ஸ்பெக்ட்ரா நிறுவனத்துடன் இணைந்து, நீட் மாதிரி தேர்வினை நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த மாதிரி தேர்வு நாளை 20ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, புதுச்சேரி புது பஸ் ஸ்டாண்ட் பின்புறம், மங்கலட்சுமி நகரில் உள்ள ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிரமாண்டமாக நடக்கிறது. இதற்கான முன்பதிவு கடந்த 14ம் தேதி துவங்கியது. டாக்டர் கனவில், மாணவ, மாணவிகள் போட்டிபோட்டுக்கொண்டு முன்பதிவு செய்து வருகின்றனர். முன்பதிவு இன்று 19ம் தேதி மாலை 6:00 மணியுடன் நிறைவு பெறுகிறது. வாய்ப்பினை மிஸ் பண்ணாமல் விண்ணப்பித்து விடுங்கள்.

இந்த மாதிரி நுழைவு தேர்வில் பதிவு செய்துள்ள மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். இது மாதிரி நீட் தேர்வு என்றாலும், தேசிய தேர்வு முகமை நடத்தும் அசல் தேர்வு போன்றே நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே, தேசிய தேர்வு முகமை விதித்துள்ள கட்டுப்பாடுகள் அனைத்துமே 'தினமலர்' நீட் மாதிரி நுழைவு தேர்விலும் மாணவர்கள் நலனுக்காக பின்பற்றப்பட உள்ளது. எனவே 'நீட்' தேர்வில் பங்கேற்பதற்கான சிறந்த அனுபவத்தை 'தினமலர்' மாதிரி தேர்வில் பங்கேற்பதன் மூலம் பெற முடியும்.

கேள்வி முறை:

நீட் நுழைவு தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்கள் கொண்டதாக இருக்கும். இயற்பியல், வேதியியல் பாடங்களில் தலா 45 கேள்விகள் தாவரவியல், விலங்கியல் உள்ளடங்கிய உயிரியல் படிப்பில் 90 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும்.

இந்த 180 கேள்விகளை மாணவர்கள் கட்டாயமாக எதிர் கொண்டு 720 மதிப்பெண்களுக்கு விடையளிக்க வேண்டி இருக்கும். அனைத்து கேள்விகளும் மல்டிபிள் சாய்ஸ் என்ற கொள்குறி வகையில் இடம் பெறும். 1 கேள்விக்கு 4 மதிப்பெண்கள் வீதம் 720 மதிப்பெண்கள். சரியான பதிலுக்கு 4 மதிப்பெண் வழங்கப்படும். தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும். பதில் அளிக்காத கேள்விகளுக்கு மதிப்பெண் இல்லை.

'நீட்' தேர்விற்கு பல ஆண்டுகளாக பயிற்சி அளித்து வரும் அனுபவம் வாய்ந்த சிறந்த ஆசிரியர்களால் ஒவ்வொரு கேள்விகளும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 'நீட்' தேர்வு எழுத விண்ணப்பித்து காத்திருக்கும் மாணவர்கள், தங்களை சுயமாக பரிசோதித்துக் கொள்ள 'தினமலரின்' நீட் மாதிரி தேர்வு அரிய வாய்ப்பு. எனவே பதிவு செய்த மாணவர்கள் மிஸ் பண்ணாம பெற்றோருடன் வாங்க....






      Dinamalar
      Follow us