/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி, தமிழக மக்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய 'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ இனிதே நிறைவு
/
புதுச்சேரி, தமிழக மக்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய 'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ இனிதே நிறைவு
புதுச்சேரி, தமிழக மக்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய 'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ இனிதே நிறைவு
புதுச்சேரி, தமிழக மக்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய 'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ இனிதே நிறைவு
ADDED : ஆக 12, 2025 02:56 AM
புதுச்சேரி: புதுச்சேரியில், மாபெரும் திருவிழா போல், நான்கு நாட்களாக மக்களை, ஷாப்பிங் கொண்டாட்டத்தில் ஆழ்த்திய 'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நேற்றுடன் இனிதே நிறைவு பெற்றது.
'தினமலர்' நாளிதழ் மற்றும் டார்லிங் நிறுவனம் இணைந்து, 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் -2025' மாபெரும் ஷாப்பிங் கண்காட்சியை, புதுச்சேரி புதிய துறைமுக மைதானத்தில் கடந்த 8ம் தேதி முதல் நான்கு நாட்கள் நடத்தியது.
புதுச்சேரி, கடலுார்,விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த மக்கள் குடும்பத்துடன் கண்காட்சியை பார்வையிட்டு, கை நிறைய பொருட்களோடும், மன நிறைவோடும் திரும்பினர்.
ஆட்டோ மொபைல் கண்காட்சியில், சொந்த கார் கனவை நனவாக்க சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். வங்கிகள் வழங்கும் கடன் வசதித் திட்டங்கள் குறித்தும் விளக்கங்கள் பெற்றனர்.
கலக்கல் கலெக் ஷன் திரை விரிப்புகள், சோபா செட், டீ பாய்கள், ஷோகேஸ் வகைகள் என ஏராளமான பொருட்களை வாங்கி, வாகனங்களை வரவழைத்து வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். பல மாநில ஆடை ரகங்கள், ஜன்னல் திரைச் சீலைகள், மகளிர் அழகு சாதன பொருட்கள், ஆபரணங்கள், கைத்தறி சுடிதார்கள், குர்தாக்கள், காட்டன் சேலைகள், காலணிகள், காய்கறி நறுக்கும் கருவிகள், இயற்கை உணவு வகைகள், சணல் பொருட்கள் என, ஒவ்வொரு ஸ்டாலிலும் கூட்டம் அலை மோதியது.
தள்ளுபடி மழை கடைசி நாளான நேற்று கண்காட்சிக்காக, சிறப்பு தள்ளுபடி, காம்போ ஆபர், எக்ஸ்சேஞ் ஆபர், பரிசு கூப்பன் என, அள்ளி வழங்கியதால், பெண்கள், கல்லுாரி மாணவிகள், பார்வையாளர்கள் முகங்களில் பரவசம் பொங்கியது.
குறிப்பாக வண்ணங்களில் வசீகரிக்கும் சணல் கைப்பை, பொம்மைகள், பர்ஸ், தரை விரிப்பு, காலணி, அணிகலன் போன்றவற்றின் விற்பனை அனல் பறந்தது. இல்லத்தரசிகள், இல்லத்தரசர்கள் தங்களுக்கு பிடித்தமான பொருட்களை மனநிறைவுடன் வாங்கி சென்றனர்.
கிட்ஸ் சோனில் இந்த முறை குட்டீஸ்களின் உற்சாகத்திற்கு வானமே எல்லை. ஆசை தீர விளையாடி மகிழ்ந்தனர். அதை கண்ட பெற்றோர் முகத்தில் பரவசம். புட் கோர்ட்டில் பல மாநிலங்களின் புதுப்புது உணவு வகைகளையும், குடும்பத்துடன் ஒரு கை பார்த்து பரவசப்பட்டனர். ரம்மியமான கூரையின் கீழ் ருசியான உணவுகளை சுவைத்து மகிழ்ந்த குடும்பங்களின் குதுாகலம் பார்ப்பதற்கே அழகாய் இருந்தது. மகளிர் முதல் மழலைகள் வரை எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
மீண்டும் சந்திப்போம் ஒட்டு மொத்தமாக, புதுச்சேரரி, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி என பல்வேறு மாவட்ட மக்களை கொண்டாட்டத்திலும், கோலாகலத்திலும் மூழ்கடித்த 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ-2025', நேற்று இரவு இனிதே நிறைவு பெற்றது. இன்னும் வித்தியாசமான, புதுமையான அம்சங்கள், இனிமையான சூழல் நிறைந்த மற்றொரு 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ'வில் மீண்டும் சந்திப்போம்.

