/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ'
/
'தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ'
ADDED : ஆக 07, 2025 02:51 AM

புதுச்சேரி: புதுச்சேரி, உப்பளம் துறைமுகம் மைதானத்தில், 'தினமலர்' மற்றும் டார்லிங் இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்காட்சி, வரும் 8ம் தேதி துவங்கி 11ம் தேதி வரை நடக்கிறது. கண்காட்சியில் மங்கையர் மனங்கவரும் அழகு சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்கள், அனைத்து தரப்பினரையும் வசீகரிக்கும் விதவிதமான உணவு வகைகள் என, அசத்தலான அரங்குகள் தயாராகி வருகின்றன.
புதுச்சேரி, கடலுார், சிதம்பரம், வடலுார், நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, திருக்கோவிலுார், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பகுதிகளில் ஷாப்பிங் செல்ல எவ்வளவு கடைகள், ஸ்டோர் இருந்தாலும், அனைத்து விதமான பொருட்களையும் ஒரே இடத்தில், குடும்பத்துடன் குதுாகலமாக ஷாப்பிங் செய்து விரும்பியதை வாங்கும் அரிய வாய்ப்பு இந்த கண்காட்சி மூலம் ஆண்டிற்கு ஒருமுறை தான் கிடைக்கும்.
அதிரடி சலுகை விலையில், உங்கள் இல்லத்துக்கு தேவையான பர்னீச்சர்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள், பரிசு பொருட்கள், அலங்கார பொருட்கள், அழகு சாதனங்கள் என, நீங்கள் வாங்கும் பொருட்களின் அரங்குகள் வரிசை கட்டி நிற்கின்றன.
குடும்பத் தலைவிகளே 'குளுகுளு' ஸ்டால்களில் 'ஷாப்பிங்' செய்து மகிழ நாளை ஒரு நாள் காத்திருங்கள்.