/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி குண்டூசி முதல் கார் வரை ஒரே இடத்தில் வாங்கலாம்
/
'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி குண்டூசி முதல் கார் வரை ஒரே இடத்தில் வாங்கலாம்
'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி குண்டூசி முதல் கார் வரை ஒரே இடத்தில் வாங்கலாம்
'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி குண்டூசி முதல் கார் வரை ஒரே இடத்தில் வாங்கலாம்
ADDED : ஆக 08, 2025 02:40 AM
புதுச்சேரி: 'தினமலர்' மற்றும் டார்லிங் இணைந்து நடத்தும் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ-2025'புதுச்சேரி உப்பளம், துறைமுகம் மைதானத்தில் இன்று காலை 10:00 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது.
பொதுமக்களுக்கு புதுமையான ஷாப்பிங் அனுபவத்தை வழங்க 'தினமலர்' நாளிதழ் சார்பில், ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ எனும் மாபெரும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரி மட்டுமின்றி, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் குடும்பத்துடன் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர்.
இந்தாண்டு மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்த 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ' புதுச்சேரி, உப்பளம் துறைமுகம் மைாதனத்தில் இன்று (8ம் தேதி) துவங்கி, 11ம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கிறது.
குளு குளு அரங்குகள் முழுவதும் ஏ.சி., வசதி செய்யப்பட்ட பிரமாண்டமான அரங்குகளில் ஏராளமான ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன. எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பர்னீச்சர்கள்,சோலார் பேனல், கார்மென்ட்ஸ், வீட்டு அலங்கார பொருட்கள், ஊஞ்சல் வகைகள், ஜூவல்லரிகள்,வீடு கட்டுமான பொருட்கள், ஆட்டோ மொபைல்ஸ், ேஷர் மார்க்கெட் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் அரங்குகள் இடம் பெற்றுள்ளது.
கண்காட்சியில், குண்டூசி முதல் கார் வரையிலான அனைத்து வகை பொருட்களையும் ஒரே கூரையின் கீழ் குடும்பத்துடன் கூலாக ஷாப்பிங் செய்து மகிழலாம்.
வெளி மாநில ஸ்டால்கள் தமிழகம், புதுச்சேரி மட்டுமின்றி மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், கேரளாஉள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட வௌி நாடுகளின்ஸ்டால்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. பேன்சி பொருட்கள், துணி வகைகள் என பல வகையான பொருட்கள் நீங்கள் விரும்பும் டிசைன்களில் குவிக்கப்பட்டுள்ளன. மகளிர் ஸ்பெஷல்கள் மலைக்க வைக்கும் விதத்தில் குவிந்துள்ளன.
குட்டீஸ் கார்னர் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு புதுமையான விளையாட்டுகள் சவால் விட காத்திருக்கின்றன. ஒட்டகச் சவாரி, குட்டீஸ் ரயில், வாட்டர் ரோலர் என எக்கச்சக்க விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்காமல், உங்களுக்கு தேவையான பொருட்களை கூலாகதேர்வு செய்து வாங்கிச் செல்லஇன்றே வாருங்கள்.