/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆசிரியர் பட்டய படிப்பிற்கு நாளை நேரடி சேர்க்கை
/
ஆசிரியர் பட்டய படிப்பிற்கு நாளை நேரடி சேர்க்கை
ADDED : ஜூலை 09, 2025 08:37 AM
புதுச்சேரி : மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிலையத்தில் பட்டயப் படிப்பிற்கு நாளை 10ம் தேதி நேரடி சேர்க்கை நடக்கிறது.
பயற்சி நிறுவன முதல்வர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட கல்வி பயிற்சி நிறுவனத்தில் இந்த கல்வி ஆண்டிற்கான இரண்டாண்டு ஆசிரியர் பட்டயப் படிப்பில் காலியாக உள்ள இடங்கள் நாளை 10ம் தேதி நேரடி சேர்க்கை மூலம் நிரப்பப்பட உள்ளது.
இப்பட்டயப் படிப்பில் சேரவிரும்புவோர் பிளஸ் 2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்ணிற்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் அசல் சான்றிதழுடன் லாஸ்பேட்டை, தொல்காப்பியர் வீதியில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்திற்கு நேரில் வந்து சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். புதுச்சேரி மாணவர்கள் சேர்ந்த பிறகும் காலி இடங்கள் இருந்தால் தமிழக மாணவர்களை கொண்டு நிரப்பப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.