/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாராட்டு சான்றிதழ் பெற்ற இயக்குநர், முதல்வரிடம் வாழ்த்து
/
பாராட்டு சான்றிதழ் பெற்ற இயக்குநர், முதல்வரிடம் வாழ்த்து
பாராட்டு சான்றிதழ் பெற்ற இயக்குநர், முதல்வரிடம் வாழ்த்து
பாராட்டு சான்றிதழ் பெற்ற இயக்குநர், முதல்வரிடம் வாழ்த்து
ADDED : ஆக 19, 2025 08:00 AM

புதுச்சேரி : சுதந்திர தின விழாவில் பாராட்டு சான்றிதழ் பெற்ற மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குநர் முத்துமீனா, முதல்வர் ரங்கசாமியிடம் வாழ்த்து பெற்றார்.
புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் முதியோர் ஓய்வூதியப்பிரிவு மூலம் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதில், ஒருங்கிணைந்த தரவுத் தளத்தை பயன்படுத்தி தகுதி மற்றும் தகுதியின்மையை விரைவாகச் சரிபார்த்து தகுந்த பயனாளிகளை தேர்வு செய்து விரைவாக உதவித்தொகை அளிக்கப்பட்டது.
இத்திட்டத்தில் புதுமையான முறைகளை சிறப்பாக மேற்கொண்டு பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியமைக்காக, துறை இயக்குநர் முத்துமீனா, முதியோர் ஓய்வூதியப்பிரிவின் உதவி இயக்குநர் பாலமுருகன், உதவியாளர் சபரீசன், எல்.டி.சி. வசந்தராஜன் மற்றும் அங்கன்வாடி ஊழியர் பவானி ஆகியோரின் செயல்திறனைப் பாராட்டி சுதந்திர தின விழாவில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு முதல்வரின் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதையடுத்து, பாராட்டுச் சான்றிதழை பெற்ற துறை இயக்குநர் முத்துமீனா, துறை ஊழியர்களுடன், முதல்வர் ரங்கசாமியை சட்டசபையில் நேற்று சந்தித்து, சான்றிதழை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.