/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி பல்கலைக்கழகத்துடன் ஆயுஷ் இயக்குனரகம் ஒப்பந்தம்
/
புதுச்சேரி பல்கலைக்கழகத்துடன் ஆயுஷ் இயக்குனரகம் ஒப்பந்தம்
புதுச்சேரி பல்கலைக்கழகத்துடன் ஆயுஷ் இயக்குனரகம் ஒப்பந்தம்
புதுச்சேரி பல்கலைக்கழகத்துடன் ஆயுஷ் இயக்குனரகம் ஒப்பந்தம்
ADDED : ஜூன் 11, 2025 07:45 AM
புதுச்சேரி; புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் புதுச்சேரி அரசின் ஆயுஷ் இயக்குனரகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்த கையெழுத்தானது.
புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் புதுச்சேரி அரசின் ஆயுஷ் இயக்குனரகம் இடையே அதிகாரப்பூர்வமான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் கையோழுத்தானது. இந்தக் கூட்டாண்மை, பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி, நிதியுதவிக்கான அணுகல், பாடத்திட்டத்தை மேம்படுத்துதல் மற்றும் ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) நடைமுறைகளை சரிபார்ப்பதற்கு பங்களிக்கும். இந்தக் கூட்டாண்மையின் கீழ், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகள் புதுச்சேரி ஆயுஷ் இயக்குனரகத்துடன் ஒத்துழைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பிரகாஷ் பாபு, ஆயுஷ் இயக்குனரகத்தின் இயக்குநர் ஸ்ரீதரன், பல்கலைக்கழக சர்வதேச உறவுகளின் டீன் விக்டர் ஆனந்த்குமார், புரிந்துணர்வு ஒப்பந்த ஒருங்கிணைப்பாளர் தில்லை சேகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.