/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விம்ஸ் மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் கவுரவிப்பு
/
விம்ஸ் மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் கவுரவிப்பு
விம்ஸ் மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் கவுரவிப்பு
விம்ஸ் மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் கவுரவிப்பு
ADDED : டிச 21, 2024 06:53 AM

புதுச்சேரி : விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் மூலம் மாற்றுத்திறனாளிகள் கவுரவிப்பு நிகழ்ச்சி, விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.
பல்கலை வேந்தர் கணேசன், நிர்வாக குழு உறுப்பினர் சுரேஷ் சாமுவேல் வழிகாட்டுதலின் படி, முதற்கட்டமாக கேரளா மாநிலம், திருச்சூரில் இருந்து விமானம் மூலம் 32க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சேலம் விம்ஸ் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டனர்.
தொடர்ந்து விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் நடந்த நிகழ்ச்சிக்கு, பல்கலை துணை வேந்தர் சுதிர் தலைமை தாங்கினார். துறை பேராசிரியர் செந்தில்குமார் வரவேற்றார்.
விழாவில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப், இணை வேந்தர் சபரிநாதன், பதிவாளர் நாகப்பன், தேர்வு கட்டுப்பாட்டாளர் மணிவண்ணன், பல்கலைக்கழக அறங்காவலர் அன்னபூரணி சண்முகசுந்தரம் கலந்து கொண்டனர்.
தன்னார்வலர் அமைப்பின் செயலாளர் சஜித்குமார் வாழ்த்துரை வழங்கினார். விமான நிலைய இயக்குனர் வைதேகிநாதன், மேலாளர் பிரகாஷ் சிறப்புரையாற்றினர்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு மேட்டூர் அணை உள்ளிட்ட பல இடங்கள் சுற்றி காண்பிக்கப்பட்டது. பின் 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' திட்டத்தை வலியுறுத்தும் விதமாக கலை நிகழ்ச்சி நடந்தது.