ADDED : பிப் 28, 2026 05:07 AM

புதுச்சேரி: புதுச்சேரி அனைத்து மாற்றுதிறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சமூக நலத்துறை அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டம் நடந்தது.
குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகளை மாற்று திறனாளிகளுக்கு உடனே வழங்க வேண்டும். மத்திய அரசு ஆணைப்படி மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் வழங்க வேண்டும். உயர்த்தப்பட்ட இலவச அரிசிக்கான தொகையை மார்ச் மாதம் முதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி சமூக நலத்துறை அலுவலகத்தை அனைத்து மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பினர் பூட்டு போடும் போராட்டம் நடத்தினர்.
அப்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். சமூகநலத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததை தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றனர்.

