/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தவறி விழுந்து காயமடைந்த மாற்றுத்திறனாளி சாவு
/
தவறி விழுந்து காயமடைந்த மாற்றுத்திறனாளி சாவு
ADDED : ஜன 20, 2024 06:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம், : மது வாங்கும் போது தவறி விழுந்து காயமடைந்த மாற்றுத்திறனாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மடுகரை அடுத்த கோலியனுார் கூட்ரோடு, கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 45; ஊனமுற்றவர். இவர் நேற்று முன்தினம் மாலை மடுகரையில் உள்ள தனியார் பாரில் மது வாங்க சென்றார். அப்போது தடுமாறி கீழே விழுந்து மயக்கமடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து இறந்து விட்டதாக தெரிவித்தார். மடுகரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.