/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாற்றுத்திறனாளிகள் தின விளையாட்டுப் போட்டிகள்
/
மாற்றுத்திறனாளிகள் தின விளையாட்டுப் போட்டிகள்
ADDED : டிச 08, 2025 04:51 AM
புதுச்சேரி: மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, ஜிப்மரில் மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது.
புதுச்சேரி ஜிப்மர் புனர்வாழ்வு மருத்துவ துறை சார்பில், மாற்றுத்திறனாளி ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
அதில், வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளின் சட்ட உரிமைகள் குறித்து, விழிப்புணர்வுஊர்வலம் மற்றும் கலை நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், ஜிப்மர் இயக்குனர் வீர்சிங் நேகி, மருத்துவக் கண்காணிப்பாளர் சகா வினோத்குமார், புனர்வாழ்வு மருத்துவத்துறை தலைவர் நவீன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

