/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பேரிடர் கால பாதுகாப்பு மாணவர்களுக்கு பயிற்சி
/
பேரிடர் கால பாதுகாப்பு மாணவர்களுக்கு பயிற்சி
ADDED : ஜூலை 20, 2025 01:31 AM

புதுச்சேரி : முருங்கப்பாக்கத்தில் மாணவர்களுக்கு தேசிய பாதுகாப்பு பயிற்சி முகாம் நடந்தது.
முருங்கம்பாக்கத்தில் உள்ள ராஷ்டிரிய ரக் ஷா பல்கலைக்கழக மாணவர்களுக்கான தேசிய பாதுகாப்பு பயிற்சி முகாம் நடந்தது.
பேரிடர் காலத்தில் மக்களுக்கு உதவுவது எப்படி, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் முதல் கட்ட உதவி அளிப்பது, சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிப்பது, விஷ ஜந்துக்கள் கடித்தால் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் தற்காப்பு கலை, டிரோன் பயிற்சி, சைபர் குற்ற விழிப்புணர்வு குறித்தும், வீட்டுக்கு அவசரகால உதவியாளரை உருவாக்குவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.மூன்று நாள் நடந்த பயிற்சி முடிவில் இந்திய கடலோர காவல் படையின் டி.ஐ.ஜி., டாஸ்லியா சான்றிதழ் வழங்கினார்.
ராஷ்டிரிய ரக் ஷா பல்கலைக்கழக இயக்குனர் அர்ஷ், புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லுாரி இயக்குனர் உதயசங்கர், பயிற்சியாளர் ஜான் பால் மாணிக்கம், செக்யூரிட்டி மேகலா உட்பட பலர் பங்கேற்றனர்.