/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர் வெளியேற்றம்
/
குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர் வெளியேற்றம்
ADDED : டிச 04, 2024 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: காட்டேரிக்குப்பத்தில் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்தது.
கனமழையால் காட்டேரிக்குப்பம் வாய்க்கால் தெருவில் உள்ள குளம் நிரம்பி அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து வெளியேற வழியின்றி கடந்த 2 நாட்களாக தேங்கியது.
தகவலறிந்த மண்ணாடிப்பட்டு கொம்யூன் ஆணையர் எழில்ராஜன் தலைமையில் ஊழியர்கள் அங்கு சென்று, மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேறும் பணியில் ஈடுபட்டனர்.
காட்டேரிக்குப்பம் அரசு பள்ளி வளாகத்தில் உடைந்து விழுந்த மரங்கிளைகள், தேத்தாம்பாக்கம் ஏரிக்கரை சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றினர்.