/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வரதராஜப் பெருமாள் கோவிலில் சொற்பொழிவு இன்று துவக்கம்
/
வரதராஜப் பெருமாள் கோவிலில் சொற்பொழிவு இன்று துவக்கம்
வரதராஜப் பெருமாள் கோவிலில் சொற்பொழிவு இன்று துவக்கம்
வரதராஜப் பெருமாள் கோவிலில் சொற்பொழிவு இன்று துவக்கம்
ADDED : மார் 15, 2024 05:56 AM

புதுச்சேரி: புதுச்சேரி வேத பாரதி சார்பில், திருச்சி கல்யாண ராமன் பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சி மூன்று நாட்கள் நடக்கிறது.
பாரதப் பண்பாட்டு அமைப்பான வேத பாரதி, புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி காந்திவீதி வரதராஜப் பெருமாள் கோவிலில், இன்று முதல் வரும் 17ம் தேதி வரை மூன்று நாட்கள் திருச்சி கல்யாணராமனின் பக்தி சொற்பொழிவு நடக்கிறது.
அதில், திரவுபதி மானம் காத்தல், நள சரித்திரம், குசேலனும், கண்ணனும் ஆகிய தலைப்புகளில் சொற்பொழிவு நடக்கிறது.
மேலும், பாகவதரின் உஞ்ச விருத்தி நிகழ்ச்சி, 16ம் தேதி லாஸ்பேட்டை, ராஜாஜி நகர், ராஜகணபதி கோவிலில் காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை நடக்கிறது.
மறுநாள் 17ம் தேதி குருமாம்பட்டு புத்துமாரியம்மன் கோவிலில், காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை நடக்கிறது.