/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காலாப்பட்டு கடல் அடியில் 500 மீட்டர் நீளம் கழிவுநீர் குழாய் கண்டுபிடிப்பு
/
காலாப்பட்டு கடல் அடியில் 500 மீட்டர் நீளம் கழிவுநீர் குழாய் கண்டுபிடிப்பு
காலாப்பட்டு கடல் அடியில் 500 மீட்டர் நீளம் கழிவுநீர் குழாய் கண்டுபிடிப்பு
காலாப்பட்டு கடல் அடியில் 500 மீட்டர் நீளம் கழிவுநீர் குழாய் கண்டுபிடிப்பு
ADDED : மார் 20, 2024 11:26 PM

புதுச்சேரி : காலாப்பட்டு கடலில் 500 மீட்டர் துாரத்திற்கு கழிவுநீர் குழாய் இருப்பதை ஸ்கூபா டைவிங் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
புதுச்சேரி, காலாப்பட்டு சொலாரா ஆக்டிவ் பார்மர் சயின்ஸ் என்ற தனியார் மருந்து தொழிற்சாலை கழிவுநீர் குழாய் கடந்த 2017ல் கடலில் துண்டித்து விடப்பட்டது. இந்த குழாயில் மீனவர்களின் வலைகள் சிக்கி சேதமடைந்தது.
வலை பாதிப்பு அடைந்த 5 மீனவர்கள், அப்பகுதி மக்கள் நல சங்க நிறுவன தலைவர் குமார் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தனர். புகாரை விசாரித்த மனித உரிமை ஆணையம், கடந்த 2021ம் ஆண்டு 8 வாரத்தில் கழிவுநீர் குழாய்களை அகற்ற உத்தரவிட்டது.
அப்போது கடலில் உள்ள கழிவுநீர் குழாயை வெளியே எடுத்து விட்டோம் என, கம்பெனி நிர்வாகம் பதில் அளித்தது. ஆனால் மீனவர்கள் வலை மீண்டும் சிக்கி பழுதானது. இதனால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீனவர்கள் வழக்கு தொடர்ந்தனர். விசாரணையில், மார்ச் 22ம் தேதிக்கு முன், கடலில் உள்ள குழாய்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சுற்றுச்சூழல் துறைக்கு உத்தரவிட்டது.
புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை இளநிலை பொறியாளர் புகழேந்தி, பிரபு தலைமையில் மீன்வளத்துறை ஆய்வாளர் பாலமுரளி, வருவாய்த்துறை ஆய்வாளர் சிவபாலன், சங்க பிரதிநிதிகள் குமார், மஞ்சினி உள்ளிட்டோர் முன்னிலையில், நேற்று முன்தினம் ஸ்கூபா டைவர்கள் அரவிந்த், சந்துரு ஆகியோர் தனித்தனி படகு மூலம் கடலில் மூழ்கி ஆய்வு நடத்தினர்.
ஆய்வில் பெரியக்காலாப்பட்டு கனகசெட்டிக்குளம் இடையில் கடலில் 6 மீட்டர் ஆழத்தில், 500 மீட்டருக்கு கழிவுநீர் குழாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதியில் சிவப்பு நிற மிதவை கயிறு கட்டி மிதக்க விட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

