/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இலவச அரிசியில் பாகுபாடு: அ.தி.மு.க., கண்டனம்
/
இலவச அரிசியில் பாகுபாடு: அ.தி.மு.க., கண்டனம்
ADDED : பிப் 12, 2025 04:30 AM

புதுச்சேரி அ.தி.மு.க., மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஜெ., பேரவை செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் ராஜாராமன், இணைச் செயலாளர் வீரம்மாள், பொருளாளர் ரவிபாண்டுரங்கன், துணைச் செயலாளர்கள் நாகமணி, காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஜெயலலிதா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாவது, மருத்துவ முதுநிலை படிப்பில், மாநில மாணவர்களின் இட ஒதுக்கீடு பாதிக்கும் வகையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்யை எதிர்த்து அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
பல்கலைகளில் காலியாக உள்ள துணைவேந்தர் உள்ளிட்ட பணியிடங்களை உடன் நிரப்பவம், மத்திய பல்கலையில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் மாநில மாணவர்களுக்கு 25 சதவீதம் உள்ஒதுக்கீடு பெற கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடும்ப தலைவிக்கு ரூ. ஆயிரம் உதவித் தொகை, ரேஷன் கடை திறப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
அரசின் இலவச அரிசி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் அரசு பாகுபாடுடன் செயல்படுவதை கண்டிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

